» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)
அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஊசி முதல் ஏ.சி. வரை அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை உலக நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக மலிவு விலையில் அதிக பொருட்களை உற்பத்தி செய்யும் சீனாவின் பொருட்களை உலக நாடுகள் அதிகளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றது.சீனாவில் இருந்து உலகநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு தனித்தனியாக வரி நிர்ணயம் செய்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு செல்போன்கள், ‘மைக்ரோ சிப்’ என்னும் நுண்சில்லுகள், கணினி பொருட்கள் உள்ளிட்டவை சீனாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக அமெரிக்காவுக்கு அதிகளவிலான வரியை சீனா விதித்து வந்தது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் தமது நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். குறிப்பாக இந்தியாவுக்கு 27 சதவீதம், அண்டை நாடான சீனாவுக்கு 104 சதவீதம் என அதிரடி காட்டினார். இதற்கு உலக நாடுகளிடையே கடும் கண்டனம் எழுந்தது. இதனால் பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் 90 நாட்கள் நிறுத்திவைத்துள்ளார்.
ஆனால் சீனாவுக்கு மட்டும் இந்த வரி விதிப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் சீனா அரசாங்கம் கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் அமெரிக்கா மீது பதிலுக்கு வரி விதிக்க முடிவு செய்தது.
அதன்படி அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு போட்டியாக அதன்மீது 125 சதவீதம் பரஸ்பர வரியை சீனா விதித்தது. இதற்கு பதிலடியாக சீனா மீதான வரிவிதிப்பை மேலும் 20 சதவீதம் அதிகரித்து 145 சதவீதமாக வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். ஆனால் ஸ்மார்ட்போன், மைக்ரோ சில்லுகள் முதலிய தொழில்நுட்ப பொருட்களுக்கான வரியில் இருந்து மட்டும் சீனாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது.
இதனால் கடுப்பான சீனா அரசாங்கம் அமெரிக்காவின் ‘போயிங்’ விமான நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் இறக்குமதி செய்யக்கூடாது, அமெரிக்கா நாட்டிற்கு பார்சல் சேவை வழங்கக்கூடாது என கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தநிலையில் சீன பொருட்களுக்கு இதுவரையில் இல்லாத வகையில் 145 சதவீத வரியை மேலும் 100 சதவீதம் உயர்த்தி 245 சதவீதமாக அதிகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதற்கு சீனா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை வர்த்தகப்போருக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப்போர் உக்கிரம் அடைந்துள்ளதால் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் மேலும் விலை உயரும் என அஞ்சப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)








