» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜப்பானில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: டாக்டர் உள்பட 3 பேர் பலி
திங்கள் 7, ஏப்ரல் 2025 3:42:50 PM (IST)

ஜப்பானில் மருத்துவ சேவைக்கான ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில், டாக்டர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புகுவோகாவில் உள்ள மருத்துவமனைக்கு ஒரு வயதான நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து இரண்டு கடலோர காவல்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டாக்டர், நோயாளி மற்றும் பராமரிப்பாளர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் விமானி, ஹெலிகாப்டர் மெக்கானிக் மற்றும் செவிலியர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதிகாரிகளின் தகவல்களின்படி, டாக்டர் கெய் அரகாவா (34), நோயாளி மிட்சுகி மோட்டோஷி (86) மற்றும் அவரது பராமரிப்பாளர் கசுயோஷி மோட்டோஷி (68) ஆகியோரின் உடல்கள் ஜப்பான் விமான தற்காப்புப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக கூறினர்.போவதில்லை - டிரம்ப் அதிரடி
ஜப்பானின் புகழ்பெற்ற "டாக்டர் ஹெலிகாப்டர்" திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம் அவசரமாக சிறப்பு மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகளை தேவையான சிகிச்சைகளை வழங்கக்கூடிய மருத்துவமனைகளுக்கு விரைவாக கொண்டு செல்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதில் இந்தத் திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது இருப்பினும், இதுபோன்ற ஒரு சில விபத்துகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் 6 ஆயிரம் வெளிநாட்டவர்களை இறந்தவர்களாக அறிவிக்க டிரம்ப் முடிவு!
சனி 12, ஏப்ரல் 2025 3:50:44 PM (IST)

ட்ரம்ப் அறிவிப்புக்கு வரவேற்பு: வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைப்பு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:59:58 PM (IST)

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:03:53 AM (IST)

மாஸ்கோவில் மே 9 வெற்றி அணிவகுப்பு: பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 5:29:19 PM (IST)

இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து: 98 பேர் பலி
புதன் 9, ஏப்ரல் 2025 12:21:44 PM (IST)

அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 12:14:56 PM (IST)
