» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து: 98 பேர் பலி

புதன் 9, ஏப்ரல் 2025 12:21:44 PM (IST)



டொமினிகன் குடியரசின் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 98 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

500 முதல் 1,000 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இசைநிகழ்ச்சி இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது. அப்போது, இசைநிகழ்ச்சி நடைபெற்ற கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 98 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.


மக்கள் கருத்து

இதுApr 10, 2025 - 09:16:41 AM | Posted IP 172.7*****

சாத்தானின் கூடாரம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory