» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ட்ரம்ப் அறிவிப்புக்கு வரவேற்பு: வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைப்பு

வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:59:58 PM (IST)



பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் விதமாக பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. 

இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன் நேற்று கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​ததற்கு இணை​யாக நாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கைகள் எடுப்​பதை ஒத்​திவைக்க முடிவு செய்​துள்​ளோம். அதன்​படி, 20.9 பில்​லியன் யூரோக்​கள் (23 பில்​லியன் டாலர்) அமெரிக்​கப் பொருட்​களின் மீதான புதிய வரி​கள் 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது. ஏனெனில், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்​பு​கிறோம். இந்த பேச்​சு​வார்த்​தைகள் திருப்​தி​கர​மாக இல்லை என்​றார், எங்​கள் எதிர் நடவடிக்​கைகள் தொடங்​கும்.

பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​கள் நிறுத்தி வைக்​கும் அதிபர் ட்ரம்​பின் முடிவு வரவேற்​புக்​குரியது. இது உலகப் பொருளா​தா​ரத்தை நிலைப்​படுத்​து​வதற்​கான ஒரு முக்​கிய​மான படி​யாகும். இவ்​வாறு உர்​சுலா தெரி​வித்​துள்​ளார்.

வரி​வி​திப்பு நிறுத்​தம் குறித்து அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறி​யுள்​ள​தாவது: அமெரிக்க பொருட்​களின் இறக்​கும​திக்கு அதிக அளவில் வரி விதிக்​கும் நாடு​களுக்​கான பரஸ்பர வரி விதிப்பு அறி​விப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 75-க்​கும் மேற்​பட்ட நாடு​கள் பரஸ்பர வரி விதிப்பு தொடர்​பாக அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்த விரும்​புவ​தாக தெரிய​வந்​ததையடுத்து இந்த நிலைப்​பாட்டை எடுத்​துள்​ளேன். மேலும், இந்த நாடு​கள் இது​வரை அமெரிக்​கா​வின் நடவடிக்​கைக்கு பதிலடி எது​வும் கொடுக்​க​வில்​லை. இதனை கருத்​தில் கொண்டு இந்த நிறுத்த காலத்​தில் அந்த நாடு​களின் பொருட்​களுக்கு அடிப்​படை​யான 10% வரி மட்​டுமே விதிக்​கப்​படும். ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் வரி 20%-​மாக இருக்​கும்.

பரஸ்பர வரி நிறுத்​தம் செய்​துள்ள நாடு​களின் பட்​டியலில் சீனா சேர்க்​கப்​பட​வில்​லை. அந்த நாட்​டுக்​கான வரி விகிதம் 104% உயர்த்​தப்​பட்ட பிறகு சீனா அமெரிக்க பொருட்​களுக்​கான வரி விகிதத்தை 84%-​மாக உயர்த்தி பதிலடி தந்​தது. இதனால், சீனா​வின் இறக்​குமதி மீதான வரி விகிதம் மட்​டும்125%-​மாக உயர்த்​தப்​படு​கிறது. இவ்​வாறு ட்ரம்ப் கூறி​யுள்​ளார். ட்ரம்ப்​பின் இந்த முடிவு அமெரிக்கா மற்​றும் சீனா இடையே ஏற்​கெனவே உள்ள வர்த்தக போரின் தீவிரத்தை மேலும் அதி​கப்​படுத்​தி​யுள்​ளது.

இந்​திய ஏற்​றும​தி​யாளர்​கள் மகிழ்ச்சி: இந்​தியா உள்​ளிட்ட நாடு​களுக்​கான பரஸ்பர வரி விதிப்​பில் 90 நாள் நிறுத்​தம் முக்​கிய​மான வியூ​கத்தை வகுப்​ப​தற்​கான வாய்ப்பை இந்​தி​யா​வுக்கு வழங்​கி​யுள்​ள​தாக ஏற்​றும​தி​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். குறிப்​பாக, சீனா​வுக்கு அப்​பால் தங்​களது உற்​பத்தி தளங்​களை அமைக்க விரும்​பும் நிறு​வனங்​களிட​மிருந்து உற்​பத்தி முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​கானமுயற்​சிகளை மத்​திய அரசு விரைவுபடுத்த வேண்​டும் என்று ஏற்​றும​தி​யாளர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

இந்​திய செல்​லுலார் மற்​றும் எலக்ட்​ரானிக்ஸ் அசோசி​யேஷன் தலை​வர் பங்​கஜ் மொஹிந்த்ரூ கூறுகை​யில், ‘‘அமெரிக்​கா​வின் அறி​விப்​பால் வியட்​நாம் போன்ற நாடு​கள் பயனடைய தயார் நிலை​யில் உள்​ளன. இதனை கருத்​தில் கொண்​டு, இந்​தியா இந்த விவ​காரத்​தில் விரை​வாக​வும், தீவிர​மாக​வும் செயல்பட வேண்​டும்​. அப்​போது​தான்​ எலக்ட்​ரானிக்​ஸ்​ உள்​ளிட்​ட பல துறை​களில்​ கணிச​மான முதலீடு​களை ஈர்​க்​க முடியும்​” என்​றார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory