» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா : குழந்தைகள் உள்பட 18 பேர் பலி

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:21:26 AM (IST)



உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் முயன்று வருகிறது. இதற்கு தொடக்கம் முதலே ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவற்றின் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது. இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனையடுத்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரம் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள விளையாட்டு மைதானம், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory