» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஐரோப்பிய தயாரிப்பு மதுபானங்களுக்கு 200% வரி : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வெள்ளி 14, மார்ச் 2025 5:55:20 PM (IST)
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்தால் ஐரோப்பிய நாடுகளில் தயார் செய்யப்படும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற மறு நொடியில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். முதலில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்தது. பின்னர் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் டிரம்ப் கவன்ம் செலுத்தினார். தற்போது அவர் அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலடி கொடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள், அதிக வரி விதிக்கக் கூடாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். தற்போது அவரது கவனம் மதுபானங்கள் மீது திரும்பி உள்ளது. இது குறித்து டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வரி விதித்தால், பதிலுக்கு அமெரிக்காவிலும் வரி அதிகரிக்கப்படும். எனவே ஐரோப்பிய யூனியன் இந்த வரியை உடனடியாக நீக்க வேண்டும்.
இல்லையென்றால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து வரும் ஒயின், ஷாம்பெயின் மற்றும் மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கப்படும். இந்த அதிகப்படியான வரி விதிப்பு அமெரிக்காவில் உள்ள மதுபான வணிகத்திற்கு பயன் அளிக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு ஏப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரான் உடனான மோதலில் மிக விரைவான வெற்றி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:57:28 PM (IST)

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: பாகிஸ்தானில் தினசரி 2 மணி நேர மின்வெட்டு அமல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:20:47 AM (IST)

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: அமெரிக்கா பின்வாங்க சவுதி அரேபியா வலியுறுத்தல்
புதன் 15, ஏப்ரல் 2026 4:35:33 PM (IST)

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8% உயர்வு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:43:28 AM (IST)

அமெரிக்காவின் சர்வாதிகாரப் போக்கே பேச்சுவார்த்தை தோல்விக்குக் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:56:21 AM (IST)

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:40:07 PM (IST)





