» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்கா திவாலாகி விடும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
புதன் 19, பிப்ரவரி 2025 4:07:40 PM (IST)
வர்த்தக பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்படி செய்ய தவறினால், அமெரிக்கா திவாலாகி விடும் என எலான் மஸ்க் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பேட்டியில், 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையானது, முந்தின அரசிடம் இருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்புக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்படி செய்ய தவறினால், அமெரிக்கா திவாலாகி விடும் என எச்சரித்து உள்ளார்.
அமெரிக்காவின் நிதியுதவி செலவிடுதல் பற்றி கடுமையாக விமர்சித்த மஸ்க், நாட்டில் வரி செலுத்தும் சராசரி அமெரிக்க குடிமகன், பைத்தியக்காரனாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்களின் வரி பணம் மோசம் வாய்ந்த வகையில் செலவிடப்படுகிறது என்றார். ஒட்டுமொத்தத்தில், பற்றாக்குறையில் இருந்து டிரில்லியன் டாலர்களை வெளியே எடுக்க வேண்டும் என்பதே இலக்கு. இது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய விசயம்.
ஒரு தனிநபருக்கும், நாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தனிநபர் அதிகம் செலவிடும்போது, அவர் திவாலாகி விடுகிறார். நாட்டுக்கும் இதுவே பொருந்தும். பெரிய அளவிலான வீணடிப்பு, மோசடி மற்றும் முறைகேடு ஆகியவை தொடர்ந்து நடந்து, ஆண்டுக்கு 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறைக்கு வழிவகுத்து விட்டது. ஜனாதிபதி டிரம்ப்பிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையுடன் அமெரிக்கா தரப்பட்டு உள்ளது. இது வருத்தத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் 6 ஆயிரம் வெளிநாட்டவர்களை இறந்தவர்களாக அறிவிக்க டிரம்ப் முடிவு!
சனி 12, ஏப்ரல் 2025 3:50:44 PM (IST)

ட்ரம்ப் அறிவிப்புக்கு வரவேற்பு: வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைப்பு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:59:58 PM (IST)

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:03:53 AM (IST)

மாஸ்கோவில் மே 9 வெற்றி அணிவகுப்பு: பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 5:29:19 PM (IST)

இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து: 98 பேர் பலி
புதன் 9, ஏப்ரல் 2025 12:21:44 PM (IST)

அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 12:14:56 PM (IST)
