» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிரியா இடைக்கால அதிபராக அகமது அல் ஷரா நியமனம்!
வியாழன் 30, ஜனவரி 2025 10:51:32 AM (IST)
சிரியா நாட்டின் இடைக்கால அதிபராக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அகமது அல் ஷரா கடந்த மாதம் அசாத்தை வீழ்த்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் ஆவார். அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில் முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.
அசாத்தின் வீழ்ச்சியுடன் முன்னாள் சிரிய ராணுவம் சரிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை உருவாக்க அல் ஷரா அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இடைக்கால நிர்வாகம் எவ்வாறு முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைக்க முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவில் 6 ஆயிரம் வெளிநாட்டவர்களை இறந்தவர்களாக அறிவிக்க டிரம்ப் முடிவு!
சனி 12, ஏப்ரல் 2025 3:50:44 PM (IST)

ட்ரம்ப் அறிவிப்புக்கு வரவேற்பு: வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஐரோப்பிய யூனியன் நிறுத்தி வைப்பு
வெள்ளி 11, ஏப்ரல் 2025 4:59:58 PM (IST)

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:03:53 AM (IST)

மாஸ்கோவில் மே 9 வெற்றி அணிவகுப்பு: பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 5:29:19 PM (IST)

இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து: 98 பேர் பலி
புதன் 9, ஏப்ரல் 2025 12:21:44 PM (IST)

அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம்: இந்தியாவுக்கு சீனா அழைப்பு
புதன் 9, ஏப்ரல் 2025 12:14:56 PM (IST)
