» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு!

புதன் 25, டிசம்பர் 2024 4:59:42 PM (IST)



சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களுக்கு மேல் தங்கி உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர். விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோ பதிவு ஒன்றை நாசாவெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், பூமியில் உள்ள அனைவருக்கும், சர்வதேச விண்வெளி வீரர்களான எங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரவேற்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் 7 பேர் இங்கே இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளோம் என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory