» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போப் பிரான்சிஸ்க்கு அமெரிக்காவின் உயரிய விருது : அதிபர் ஜோ பைடன் வழங்கினார்!

திங்கள் 13, ஜனவரி 2025 8:52:04 AM (IST)



போப் பிரான்சிஸ்க்கு அமெரிக்காவின் உயரிய விருதை அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பதவிக் காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன் விழாவில் கலந்துகொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்கிறார். இந்த விழாவில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே, அதிபர் பதவியில் ஒரு வார காலம் மீதமுள்ள நிலையில் கடைசி வெளிநாட்டுப் பயணமாக இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் கலிபோர்னியா காட்டுத்தீ எதிரொலியாக அதிபர் பைடனின் இத்தாலி பயணம் ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டது. அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கினார். போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் பேசிய அதிபர் பைடன் இந்த விருதை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார். 

இதுதொடர்பாக, அதிபர் பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை என பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு, உலக அமைதி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு அதிபரின் மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

யாரு ?Jan 13, 2025 - 04:37:51 PM | Posted IP 162.1*****

இரண்டும் நாட்டுக்கு விளங்காதவைகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory