» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பூமியை சுற்றி வர இருக்கிறது மினி நிலவு : இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

புதன் 18, செப்டம்பர் 2024 8:39:57 AM (IST)



பூமியின் மினி நிலவு வருகிற 29-ந் தேதியில் இருந்து வருகிற நவம்பர் 25-ந் தேதி வரை பூமியை சுற்றி வர இருக்கிறது. இதனை வெறும் கண்ணால் காணமுடியாது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ‘சைடிங் ஸ்பிரிங்' என்ற ஆய்வகத்தில் வானியலாளர் ராபர்ட் எச்.மெக்நாட் என்பவர் கடந்த 1991-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி, ‘1991 வி.ஜி' என்ற சிறுகோள் ஒன்றை கண்டுபிடித்தார். இந்து மத இதிகாசமான மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் தேர்ந்தெடுத்த பெயர் ‘அர்ஜூனா'. இதனை சர்வதேச வானியல் ஒன்றியத்தால் (ஐ.ஏ.யு) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. 

‘அர்ஜூனா' என்பது சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்களின் குழுவாகும். இது ஒரு தனித்துமானது. மகாபாரதத்தில், அர்ஜூனன் தனது துணிச்சலுக்கும், இணையற்ற வில்வித்தை திறமைக்கும், ஞானத்திற்கும் பெயர் பெற்றவர். அர்ஜூனனின் வேகமான அம்புகளைப் போல, சூரிய குடும்பத்தின் வழியாக சிறுகோள்கள் விரைவாக கடந்து செல்வதையும், அதனை கணிக்க முடியாத தன்மையையும் கொண்டதால் இந்த பெயரை பெற்றிருக்கிறது.

பூமிக்கு அருகில் உள்ள பொருட்களைக் கண்காணிக்க அமெரிக்கா நாசாவால் நிதியளிக்கப்பட்ட தானியங்கு அமைப்பான 'சிறுகோள்களால் நிலப்பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக எச்சரிக்கை அளிக்கும் அமைப்பு' (அட்லாஸ்) கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி '2024 பி.டி.5' என்ற சிறுகோளை கண்டுபிடித்துள்ளது. 

இதுவும் இந்து மத இதிகாசமான மகாபாரதத்துடன் தொடர்பான அர்ஜூனன் சிறுகோள்களின் குழுவைக் கொண்டுள்ளது. பூமியின் தற்காலிக மினி நிலவு என்றும் அழைக்கப்படும் இந்த சிறுகோள் 10 மீட்டர் விட்டம் கொண்டது. 3 ஆயிரத்து 476 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட வழக்கமான நிலவைவிட 3 லட்சத்து 50 ஆயிரம் மடங்கு சிறியதாகும். 53 நாட்கள் பூமியை சுற்றி வரும் இந்த சிறுகோளை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.

சிறுகோளின் இயக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 2024 பிடி5 அர்ஜுனா சிறுகோள் குழுவின் ஒரு பகுதி இந்த சிறுகோள் பூமியுடன் மோதாது என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மினி நிலவு பூமியின் நீள்வட்ட விசையிலிருந்து பிரிந்து நவம்பர் 25-ந்தேதி சூரிய குடும்பத்தின் பரந்த பகுதிக்கு திரும்புவதற்கு முன் வருகிற 29-ந் தேதி முதல் வருகிற நவம்பர் 25-ந் தேதி வரை பூமியை கிட்டத்தட்ட 2 மாதங்கள் சுற்றிவரத் தொடங்கும் என்று இஸ்ரோவின் விண்வெளிப் பொருள்கள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு நெட்வொர்க்கின் (நேத்ரா) தலைவர் டாக்டர் ஏ.கே.அனில் குமார் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க வானியல் சங்கத்தின் (ஆர்.என்.ஏ.ஏ.எஸ்.) ஆராய்ச்சிக் குறிப்புகளில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2024 பிடி5-ன் சுற்றுப்பாதை பண்புகள் அர்ஜூனா சிறுகோள் குழு தொகுப்பில் இருந்து வரும் சிறுகோள்களின் பண்புகளை கொண்டுள்ளது. பூமியைச் சுற்றி மினி நிலவு தோன்றுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு 1997, 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இதே போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory