» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து : 13 இந்தியர்கள் மாயம்!

புதன் 17, ஜூலை 2024 5:33:08 PM (IST)



ஓமனில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 13 இந்தியர் உட்பட 16பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஓமன் நாட்டின் கடலோர பகுதியில் துகம் என்ற துறைமுக நகர் உள்ளது. அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்க தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த நகரருகே ராஸ் மத்ரகா என்ற இடத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல்கள் தொலைவில் எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென கவிழ்ந்தது.

இதுபற்றி ஓமனின் கடல்வழி பாதுகாப்பு மையம் வெளியிட்ட செய்தியில், இந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் பயணித்து உள்ளனர். மற்ற 3 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கப்பல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடன் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது. 117 மீட்டர் நீளத்துடன் எண்ணெய் பொருட்களை ஏற்றி செல்ல கூடிய வகையில் 2007-ம் ஆண்டில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பிரெஸ்டீஜ் பால்கன் என்ற பெயரிடப்பட்ட கோமரோஸ் நாட்டின் கொடியுடன் கூடிய அந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில், காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory