» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நமீபியாவில் வரலாறு காணாத வறட்சி: வன விலங்குகளை வேட்டையாட அரசு திட்டம்!

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 5:52:03 PM (IST)

நமீபியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக 723 வன விலங்குகளை வேட்டையாட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

வரலாறு காணாத வறட்சியால் நமீபியாவில் சுமார் 14 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமீபியா அரசின் இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தென்னாப்பிரிக்காவின் கணிசமான பகுதியை வறட்சி பாதித்துள்ளது. இப்பகுதியில் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டது. 

கடந்த பத்தாண்டுகளில் 2018 முதல் 2021 வரை பல நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், இந்த குறிப்பிட்ட வறட்சி குறிப்பாக கடுமையானது மற்றும் பரவலாக உள்ளது. நமீபியாவின் உணவுக்காக வனவிலங்குகளை வேட்டையாடும் திட்டத்தில் 300 வரிக்குதிரைகள், 30 நீர்யானைகள், 50 ஆப்பிரிக்கச் சிறுமான்கள், 60 எருமைகள், 100 நீலக் காட்டுமான் மற்றும் 100 எலாண்ட்ஸ் (ஒரு வகை மான்) ஆகியவைகளை வேட்டையாட திட்டமிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory