» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷ்யா: நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு!!

புதன் 18, டிசம்பர் 2024 5:21:43 PM (IST)



புற்றுநோய்க்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்' என ரஷ்யா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயை குணப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த தடுப்பூசி பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் அளித்த பேட்டியில், 'புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம். இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்' என்றார்.

பரிசோதனைகளின்போது, இந்த தடுப்பூசியானது சிறப்பாக செயல்பட்டு புற்றுநோய் வளர்ச்சி மற்றும் புற்றுநோய் பரவுவதை தடுத்ததாக கமலேயா தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory