» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் 2 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதன் 4, செப்டம்பர் 2024 11:06:10 AM (IST)



அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஈட்டன், அஷ்யூரண்ட் நிறுவனத்தினர், தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிகாகோ வருகை தந்த போது தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்வர் சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக, மின் மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிறுவனம் தமிழகத்தில் ரூ.200 கோடி முதலீடு செய்ய உள்ளது.

அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

"சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்திற்காக ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒப்பந்தம் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்' என முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சிகாகோ கடற்கரையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார். சாலைகள் மற்றும் கடற்கரை சாலையில் முதல்வர் உற்சாகமாக சைக்கிள் ஒட்டிச்சென்ற காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory