» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் ஆன்லைன் மூலம் நிதி மோசடி: 137 இந்தியர்கள் கைது!

சனி 29, ஜூன் 2024 4:56:37 PM (IST)

இலங்கையில் ஆன்லைன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக 137 இந்தியர்களை போலீசார் கதைு செய்துள்ளனர்.

இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக தொடர்புகொண்ட நபரிடம் பணத்தை இழந்தார். இது குறித்து அவர் போலீசில் புகாரளித்தார். இந்த வழக்கு தொடர்பாக பேராதனை பகுதியில் வசித்து வரும் தந்தை, மகன் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், இவர்கள் ஆன்லைன் வாயிலாக ஏமாற்றி பணம் பறிப்பதும், சட்டவிரோத சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதும், இதன் பின்னணியில் பெரிய கும்பல் இயங்கி வருவதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்புவின் பல்வேறு இடங்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு உள்ள சந்தேகத்திற்கிடமான சொகுசு பங்களாவை சோதனையிட்ட போது, 13 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 57 மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடந்த சோதனையில் பலர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, மொத்தம் 135 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்களில் 137 பேர் இந்தியர்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சிலருக்கு துபாய், ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

தமிழன்Jun 30, 2024 - 10:40:18 AM | Posted IP 162.1*****

அந்த 137 பேர் எல்லாம் வடை நாட்டுக்காரானாக இருப்பான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory