» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து சிறையில் இருந்து விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை

செவ்வாய் 25, ஜூன் 2024 11:32:37 AM (IST)



இங்கிலாந்து சிறையில் இருந்து விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டார்.

விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அசாஞ்சே, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தொடங்கியது.

இதையடுத்து, ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இங்கிலாந்து சிறையில் இருந்து ஜூலியன் அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை விக்கி லீக்சில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொள்வதாக ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்காவில் ஆஜராகவும் ஒப்புக்கொண்டார். அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.

இங்கிலாந்து சிறையில் இருந்த அசாஞ்சே, அமெரிக்காவின் நீதித்துறையின் ஒப்பந்தம் செய்துகொண்டார். ஒப்பந்தப்படி, அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை அசாஞ்சே ஒப்புக்கொண்டு கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இந்த குற்றத்திற்கு 62 மாதங்கள் (1,860 நாட்கள்) சிறை தண்டனை விதிக்கப்படும். ஆனால், அசாஞ்சே ஏற்கனவே 1,901 நாட்கள் இங்கிலாந்து சிறையில் இருந்துள்ளார். 

இதனால், ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் அதற்கான தண்டனையை ஏற்கனவே இங்கிலாந்து சிறையில் அனுபவித்ததால் விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நீதித்துறை சம்மதம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து சிறையில் இருந்து அசாஞ்சே இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, இங்கிலாந்தில் இருந்து அசாஞ்சே விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவர் நாளை அமெரிக்காவின் மெரினா தீவில் உள்ள கோர்ட்டில் ஆஜராக உள்ளார். அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்ட குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளார். பின்னர், ஏற்கனவே இங்கிலாந்தில் சிறை தண்டனை அனுபவித்ததையடுத்து ஒப்பந்தப்படி அவரை அமெரிக்க கோர்ட்டு வழக்கில் இருந்து விடுதலை செய்ய உள்ளது. இதனை தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே தனது சொந்த நாடான ஆஸ்திரேலியா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors





CSC Computer Education



Thoothukudi Business Directory