» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென்கொரியாவில் அமெரிக்க போர்க்கப்பல்: வடகொரியாவை சமாளிக்க கூட்டுப்போர் பயிற்சி
ஞாயிறு 23, ஜூன் 2024 9:20:52 AM (IST)

வடகொரியாவை சமாளிக்க அமெரிக்காவுடனான கூட்டுப்போர் பயிற்சியை மீண்டும் தொடங்க தென்கொரியா முடிவு செய்துள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் வடகொரிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது போர் ஏற்பட்டால் இரு நாடுகளும் பரஸ்பரம் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தம் தங்களது பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷிய தூதரை வரவழைத்து தென்கொரியா கண்டனத்தை தெரிவித்தது.
இதனையடுத்து அமெரிக்காவுடனான கூட்டுப்போர் பயிற்சியை மீண்டும் தொடங்க தென்கொரியா முடிவு செய்துள்ளது. இதற்காக அணுசக்தி மூலம் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் நேற்று தென்கொரியா சென்றடைந்தது. எனவே இந்த கூட்டுப்போர் பயிற்சியானது விரைவில் தொடங்கும் என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)

சீன பொருட்களுக்கு 245% வரி : டிரம்ப் அரசு அதிரடி
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:11:47 AM (IST)

அமெரிக்க இறக்குமதி இறைச்சியில் பாக்டீரியா பாதிப்பு? தடை விதிக்க சீனா முடிவு!!
புதன் 16, ஏப்ரல் 2025 12:46:01 PM (IST)

ஹமாசுக்கு ஆதவு: இந்திய வம்சாவளி பெண் அதிகாரியை நீக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 11:52:32 AM (IST)

வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி வழக்கு : மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது!
திங்கள் 14, ஏப்ரல் 2025 12:01:43 PM (IST)
