» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்காவில் வெப்ப அலை: ஹஜ் புனித பயணம் சென்ற 550 பேர் பலி!

வெள்ளி 21, ஜூன் 2024 4:35:05 PM (IST)மெக்காவில் கடுமையான வெப்பம் காரணமாக ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 550 பயணியர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக வெப்பம் பதிவாகி வருவதால், அந்நாட்டு மக்களே செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

சவுதி அரேபியா வானிலை மைய அறிக்கையின்படி, மெக்காவில் அல் ஹராம் பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதாகக் கூறப்படுகிறது.இந்த ஆண்டு சவுதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரையின் போது சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 323 பேர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 60 பேர் ஜோர்டான் நாட்டு மக்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அவர்களது உடல்கள் மெக்காவுக்கு அருகில் உள்ள அல் - மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை சவுதி அரசு செய்கிறது. அவ்வாறு பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாததாலும் அதிகம் பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

இயற்கைக்கு மாறுங்கள்Jun 21, 2024 - 06:28:34 PM | Posted IP 162.1*****

மெக்காவில் நிறைய மரங்களை வளர்க்கமாட்டாங்களாம், மதத்தை மட்டும் வளர்ப்பாங்களாம். அங்கு நிழல் தரும் இயற்கை மரத்துக்கு பதிலாக பெரிய செயற்கை குடை போல் நிழற்குடை அமைப்பாங்களாம். என்ன ஒரு செயற்கை அறிவு? சீனாக்காரன் பாலைவனத்தை வேகமாக சோலைவனமாக மாத்துகிறான் இயற்கையை பின்பற்றுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory