» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை-இந்தியா பாலம் ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவு: ரணில் விக்ரமசிங்க தகவல்!
திங்கள் 17, ஜூன் 2024 11:10:58 AM (IST)
இலங்கை-இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்று இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற பிரதமா் மோடி பதவியேற்பு விழாவில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றாா். இந்தச் சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வரும் 20-ஆம் தேதி இலங்கை வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இதுவரை அதிகாரபூா்வ தகவல் வெளியிடப்படவில்லை.
எஸ்.ஜெய்சங்கரின் இலங்கைப் பயணம் உறுதி செய்யப்பட்டால், வெளியுறவு அமைச்சராக மீண்டும் பதவியேற்ற பின் அவா் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமையும். இப்பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மின்தொகுப்பு இணைப்புத் திட்டம் குறித்தும் தங்களிடம் மிகையாக உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவிடம் விற்பனை செய்வது தொடா்பாகவும் விவாதிக்கப்படும்; மன்னாரில் அதானி குழுமத்தின் காற்றாலை திட்டம், திருகோணமலையில் தொழில் மண்டலம் அமைக்கும் திட்டம் உள்பட இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மீன்வளத் துறை அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தாா். தமிழகம்-இலங்கை இடையிலான பாக் நீரிணைப் பகுதி மீன்வளம் மிக்கதாகும். இங்கு எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக, இருதரப்பிலும் மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா்கதையாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எரிசக்தி துறையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவு
சனி 15, பிப்ரவரி 2025 12:55:06 PM (IST)

மோடி - ட்ரம்ப் சந்திப்பு : பயங்கரவாதி ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்பந்தம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 12:29:36 PM (IST)

இலங்கை மின்திட்டங்களில் இருந்து அதானி குழுமம் விலகல் : 440 மில்லியன் டாலர் ஒப்பந்தம் ரத்து!!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:30:04 PM (IST)

உக்ரைன் - ரஷிய அதிபர்கள் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சு: டிரம்ப் தகவல்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:25:41 PM (IST)

பிரான்சில் புதிய இந்திய தூதரகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
புதன் 12, பிப்ரவரி 2025 4:45:22 PM (IST)

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகத்திற்கு போப் பிரான்சிஸ் கண்டனம்
புதன் 12, பிப்ரவரி 2025 11:46:06 AM (IST)

தமிழன்Jun 17, 2024 - 02:08:13 PM | Posted IP 162.1*****