» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நடுரோட்டில் பெண் மேயரை சுட்டு கொன்ற மர்ம நபர்கள் : மெக்சிகோவில் பயங்கரம்

வியாழன் 6, ஜூன் 2024 8:56:25 AM (IST)

மெக்சிகோவில் நடுரோட்டில் பெண் மேயரை மர்ம நபர்கள்   சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் போதை கும்பல்கள், சட்டவிரோத ஆயுத பரிமாற்றம், பயங்கரவாதம், கள்ளநோட்டு புழக்கம் என நாடு முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குற்ற சம்பவங்களின் கூடாரமாக விளங்கும் மெக்சிகோவில் நிழல் உலக தாதாக்கள், ரவுடிகள், கூலிப்படையினரை கட்டுப்படுத்த முடியாமல் ஜனநாயகமும், சட்ட திட்டங்களும் செயலிழந்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த ஜூன் 2-ந்தேதி மெக்சிகோவில் பொதுத்தேர்தல் நடந்தது.

புதிய அதிபர், பிரதிநிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் 128 உறுப்பினர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்நது. இந்த தேர்தலுடன் உள்ளாட்சி தேர்தலும் நடந்து முடிந்தது. ஒரே கட்டத்தில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான மொரேனா கட்சியை சேர்ந்த கிளாடியா சீன்பாம் வெற்றி பெற்றார். அவர் 58.75 சதவீத வாக்குகளை பெற்றார். இதன் மூலம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமை அவர் பெறுகிறார்.

மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மிசோகன் மாகாணம் கோடிஜா நகர் மேயராக யோலன்டா சான்சஸ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில் யோலன்டா உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த யோலன்டாவை வழிமறித்தது. பின்னர் அதிலிருந்து இறங்கிய மர்ம கும்பல் ஒன்று யோலன்டாவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியது. 

இதில் தலை, கழுத்து, மார்பு பகுதி என பல்வேறு இடங்களில் குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் யோலன்டா சான்சஸ் உயிரிழந்தார். மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் மேயரை மர்ம நபர்கள் சுட்டு கொன்ற விவகாரம் அங்கே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory