» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐஸ்லாந்து நாட்டின் 2வது பெண் அதிபரானார் தோமஸ் டோட்டிர்!

திங்கள் 3, ஜூன் 2024 11:17:07 AM (IST)



ஐஸ்லாந்து நாட்டின் அதிபர் தேர்தலில் தோமஸ்டோட்டிர் 34.6 சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டின் 2வது பெண் அதிபரானார்.

ஐஸ்லாந்து நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பெண் தொழில் அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர். இந்நிலையில் தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஹல்லா தோமஸ்டோட்டிர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்,

இதன்படி ஐஸ்லாந்து நாட்டின் புதிய மற்றும் இரண்டாவது பெண் அதிபராக ஹல்லா தோமஸ் டோட்டிர் பதவியேற்க உள்ளார். 55 வயதான தோமஸ் டோட்டிர் 34.3 சதவீத வாக்குகளும், 48 வயதான ஜாகோப்ஸ்டோட்டிர் 25.5 சதவீத வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து ஹல்லா தோமஸ் டோட்டிர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக கடந்த 1980ம் ஆண்டில் விக்டிஸ் பின்னபோகாடோட்டிர் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory