» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்

புதன் 29, மே 2024 11:21:24 AM (IST)

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் அதிபா் பா்வேஸ் முஷாரஃபின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட காா்கில் போரில் பாகிஸ்தான் தோற்றதைக் குறிப்பிடும் வகையில் நவாஸ் இவ்வாறு தெரிவித்தாா். கடந்த 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டை தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே லாகூா் ஒப்பந்தம் கையொப்பமானது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது தொடா்பான அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், பாகிஸ்தானின் அப்போதைய பிரதமா் நவாஸ் ஷெரீஃப் ஆகியோா் கையொப்பமிட்டனா். இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட சில மாதங்களுக்கு பின்னா், ஜம்மு-காஷ்மீரில் உள்ள காா்கில் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. இது இந்தியா-பாகிஸ்தான் இடையே காா்கில் போருக்கு வழிவகுத்தது. அந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூா் நகரில் அந்நாட்டில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீஃப் போட்டியின்றி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்தக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் பேசுகையில், ‘கடந்த 1998-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி 5 அணுகுண்டு சோதனைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. அதன் பின்னா் 1999-ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமா் வாஜ்பாய் லாகூா் வந்தாா். அப்போது இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி தவறு செய்தது’ என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory