» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்: அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை

ஞாயிறு 26, மே 2024 7:55:27 PM (IST)

இந்திய வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்று அமெரிக்காவின் ‘இண்டியா பர்ஸ்ட் க்ரூப்’ நிறுவனத்தின் சிஇஓ ரான் சோமர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட ரான் சோமர்ஸ் பேசியதாவது: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 140 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டின் தேர்தல்நடைமுறை வியப்பைத் தருகிறது. உலகமே இந்தியாவின் தேர்தலை உற்று நோக்குகிறது.

இந்தத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்றில்இதுவரையில் இல்லாத அளவில்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பார் என்று நம்புகிறேன். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு பிரதமர்மோடி செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவின் அடுத்த 23 ஆண்டு பயணத்தில் அமெரிக்காஉடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கும். வர்த்தக முதலீடு, பொருளாதார ஒருங்கிணைவு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள்,கல்வி மற்றும் திறன் மேம்பாடு சார்ந்து இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory