» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
திங்கள் 11, டிசம்பர் 2023 11:44:25 AM (IST)

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. பலத்த காற்று வீசியதில் பல வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் பல வாகனங்கள் சாலைகளில் கவிழ்ந்து கிடந்தன. புயலை தொடர்ந்து கென்டக்கி, நாஷ்வில்லி, மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பல வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சுமார் 85 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










