» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இத்தாலியில் மருத்துவமனையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு
ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:52:46 AM (IST)

இத்தாலியில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இத்தாலியின் பிரபல சுற்றுலா தலமான டிவோலி நகரில் ஒரு தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.நேற்று வழக்கம்போல் அந்த மருத்துவமனை இயங்கி வந்த நிலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென மருத்துவமனை முழுவதும் பரவியது.
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து அனைவரும் வெளியேறும்படி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மற்றொருபுறம் மருத்துவமனையில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் வேகமாக நடைபெற்றது. அப்போது மீட்பு படையினர் ஏணிகள் மூலம் ஏறி நோயாளிகளை அங்கிருந்து மீட்டனர். எனினும் இந்த தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நோயாளிகள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










