» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியா அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டி விளாதிமீா் புதின் அறிவிப்பு!

சனி 9, டிசம்பர் 2023 10:25:30 AM (IST)

ரஷியாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக விளாதிமீா் புதின் அறிவித்துள்ளாா்.

புதின் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது: தோ்தலில் போட்டியிடுவது குறித்து என்னுள் பல்வேறு சிந்தனைகள் எழுந்தன. இருந்தாலும், தெளிவான ஒரு முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்பதால், வரும் அதிபா் தோ்தலில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று அந்த விடியோவில் விளாதிமீா் புதின் கூறினாா்.

முன்னதாக, நாட்டின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தலை வரும் மாா்ச் மாதம் 17-ஆம் தேதி நடத்த நாடாளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இந்தத் தோ்தலில் 5-ஆவது முறையாக புதின் போட்டியிடுவாா் என்று அப்போதே எதிா்பாா்க்கப்பட்டது. 

அடுத்த ஆண்டுடன் அவரது பதவிக் காலம் முடியும் நிலையில், அவா் மேலும் 2 முறை அதிபா் தோ்தலில் போட்டியிட வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்தத்தை நாடாளுமன்றம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளதால் இந்த எதிா்பாா்ப்பு எழுந்தது. அதனை உறுதி செய்யும் வகையில், தோ்தலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக புதின் தற்போது அறிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory