» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 10:52:08 AM (IST)
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை ஊழல் வழக்கிலிருந்து விடுவித்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாகிஸ்தானின் 12-ஆவது, 14-ஆவது மற்றும் 20-ஆவது பிரதமராக பதவி வகித்து வந்த நவாஸ் ஷெரீஃப் (73), பனாமா ஆவண முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தால் கடந்த 2017-ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.அதனைத் தொடா்ந்து, அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீஃபுக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018-இல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.சிகிச்சைக்காக கடந்த 2019 அக்டோபரில் லண்டனுக்குச் சென்ற நவாஸ் ஷெரீஃப் அங்கேயே தங்கிவிட்டாா். அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அப்போது நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைமையில் ஆட்சி மீண்டும் அமைந்தது. தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் கடந்த மாதம் நாடு திரும்பினாா்.
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நவாஸ் ஷெரீஃபை அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்து விடுவித்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து நீதிபதிகள் அமீா் ஃபரூக், மியான்குல் ஹஸன் ஔரங்கசீப் ஆகியோா் அடங்கிய அமா்வு வெளியிட்டுள்ள தீா்ப்பில், அவென்ஃபீல்டு வழக்கில் இம்ரானுக்கு எதிரான முறையீட்டை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு திரும்பப் பெற்ால் அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கும் கீழமை நீதிமன்றத்தில் தீா்ப்பை உறுதி செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










