» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்: அதிபர் ரணில்உத்தரவு !

திங்கள் 27, நவம்பர் 2023 5:39:21 PM (IST)

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை நீக்கம் செய்தும், வாரிய நிர்வாகத்துக்காக 7 பேர் குழுவை அமைத்தும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அந்நாட்டு அரசு தலையீட்டை அடுத்து ஐசிசி உறுப்பினா் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தி ஐசிசி உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில், இலங்கையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ரோஷன், "கிரிக்கெட்டை சரிசெய்யும் முயற்சியில் நான் கொல்லப்படலாம். அவ்வாறு நான் கொலை செய்யப்பட்டால் அதிபரும், அதிபரின் ஆலோசகருமே காரணம்.” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அமைச்சர் பதவியிலிருந்து ரோஷனை நீக்கி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory