» செய்திகள் - விளையாட்டு » உலகம்
96 வருடம் பழமையான விஸ்கி மதுபாட்டில் ரூ.22 கோடிக்கு ஏலம்!
திங்கள் 20, நவம்பர் 2023 8:05:01 PM (IST)

பழமையான விஸ்கி மதுபாட்டில் ஒன்று பெருந்தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற விஸ்கி தயாரிப்பு நிறுவனமான மக்கலன் அகாடமி 1926 காலத்தில் தயாரித்த 40 விஸ்கி பாட்டில்களை பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்தது. அவற்றில் சில மது பாட்டில்கள் அவ்வப்போது ஏலத்தில் விற்கப்பட்டன. மீதம் இருந்த விஸ்கி பாட்டில்கள் இங்கிலாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அதில் ஒரு விஸ்கி பாட்டிலை ஏலம் விடுவதாக அறிவித்தனர்.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அந்த மது பாட்டில் 2.7 மில்லியன் டாலர் தொகைக்கு விற்பனையாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.22.48 கோடி ஆகும். இது மதுபான ஏலத்தில் ஒரு மைல்கல் சாதனை. இந்த மது பாட்டில் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!
புதன் 29, நவம்பர் 2023 5:18:37 PM (IST)

நியூசிலாந்து பொருளாதாராத்தை மேம்படுத்த முன்னுரிமை :புதிய பிரதமர் லக்சன் உறுதி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:31:44 AM (IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் வரவேற்பு
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:17:45 AM (IST)

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்: அதிபர் ரணில்உத்தரவு !
திங்கள் 27, நவம்பர் 2023 5:39:21 PM (IST)

இந்தியா, சீனா நாட்டினருக்கு விசா தேவை இல்லை - மலேசியா பிரதமர் அறிவிப்பு!
திங்கள் 27, நவம்பர் 2023 4:57:46 PM (IST)

யூத எதிர்ப்புக்கு எதிராக லண்டனில் பேரணி : இந்திய வம்சாவளியினர் ஆதரவு!
திங்கள் 27, நவம்பர் 2023 12:15:19 PM (IST)
