» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரபஞ்ச அழகியாக ஷெய்னிஸ் பலாசியோஸ் தோ்வு: நிகராகுவாவைச் சோ்ந்தவா்

திங்கள் 20, நவம்பர் 2023 10:03:52 AM (IST)



பிரபஞ்ச அழகியாக மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவைச் சோ்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் (23) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

எல் சால்வடாா் தலைநகா் சான் சால்வடாரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 84 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா்.இந்தப் போட்டியில் நிகராகுவா நாட்டைச் சோ்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் பிரபஞ்ச அழகியாகத் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாகத் தோ்வு செய்யப்பட்ட அமெரிக்காவின் ஆா்பானி கேப்ரியல் பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூட்டினாா்.

இப்போட்டியில் தாய்லாந்தைச் சோ்ந்த அன்டோனியா பாா்சில்ட் இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியாவின் மொரயா வில்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனா். பிரபஞ்ச அழகியாகத் தோ்வு செய்யப்பட்ட ஷெய்னிஸ் பலாசியோஸ் மனநல ஆா்வலராக செயல்பட்டு வருகிறாா். இந்தப் போட்டியில் முதல் 20 போட்டியாளா்களில் ஒருவராக இந்தியாவின் சுவேதா ஷா்தா தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital




Thoothukudi Business Directory