» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மனிதநேயம் கருதி போரினை உடனடியாக நிறுத்த வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்
திங்கள் 6, நவம்பர் 2023 5:37:17 PM (IST)
மனிதநேயம் கருதி அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகிக்கொண்டிருக்கும் போரினை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐநாவின் அனைத்து முக்கிய தலைவர்களும் வெளியிட்டுள்ளக் கூட்டு அறிக்கையில், கடந்த ஒரு மாதகாலமாக இந்த உலகம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரினால் பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் பயங்கரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதிக எண்ணிக்கையில் உயிர்கள் பலியாகியுள்ளது என ஐ.நா. தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
'அப்பாவி மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு, மருத்துவமனைகள் முதல் புனிதத் தளங்கள் வரை அனைத்தும் தகர்க்கப்பட்டிருப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத குற்றமாகும்' என ஐ.நாவின் அனைத்து 18 அமைப்புத் தலைவர்களும் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு ஹமாஸ் உடனடியாக பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றும், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. 'இதற்கு மேல் பொறுக்க முடியாது. போரை உடனடியாக நிறுத்தி அதிகபடியான உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்' என ஐ.நா. தன் அறிக்கையில் கூறியுள்ளது
இந்தியன்Nov 6, 2023 - 09:35:41 PM | Posted IP 162.1*****