» செய்திகள் - விளையாட்டு » உலகம்
விமானப்படை பயிற்சிதளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 9பேரை சுட்டு கொன்ற பாக். ராணுவம்!
ஞாயிறு 5, நவம்பர் 2023 10:27:13 AM (IST)
பாகிஸ்தானில் விமானப்படை பயிற்சிதளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மியான்வாலியில் விமானப்படை பயிற்சிதளம் அமைந்துள்ளது. இங்கு நேற்று ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சில பயங்கரவாதிகள் அங்கு நுழைந்தனர். அவர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ராணுவ வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பயிற்சிதளத்தில் இருந்த 3 விமானங்கள் சேதம் அடைந்தன. இதனையடுத்து ராணுவத்தினர் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பலுசிஸ்தான், பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்காக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
விமானப்படை பயிற்சி தளம் மீதான இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வாருல்-ஹக்-கக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் ராணுவம் முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










