» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் தீவிபத்து 34 பேர் சாவு; 14பேர் படுகாயம்

ஞாயிறு 29, அக்டோபர் 2023 10:17:56 AM (IST)



கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

கஜகஸ்தானின் கரகண்டா பிராந்தியம் கோஸ்டென்கோ நகரில் ஒரு நிலக்கரி சுரங்கம் செயல்படுகிறது. இது ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்சிலர் மிட்டல் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். இந்த சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றன. அப்போது 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தனர். திடீரென அந்த சுரங்கத்தில் தீப்பிடித்து எரிந்தது.

இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அதேசமயம் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்த நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் இரங்கல் தெரிவித்தார். மேலும் ஆர்சிலர் மிட்டல் டெர்மிடாவ் நிறுவனத்துடனான முதலீட்டு ஒப்பந்தத்தை இத்துடன் ரத்து செய்வதாகவும் அவர் அறிவித்தார். இந்த நிறுவனம் சார்பில் கரகண்டா பிராந்தியத்தில் 8 நிலக்கரி சுரங்கங்களும், மத்திய மற்றும் வடக்கு கஜகஸ்தானில் 4 இரும்பு தாது சுரங்கங்களும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory