» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை: இலங்கை அரசு அறிவிப்பு
செவ்வாய் 24, அக்டோபர் 2023 11:12:25 AM (IST)
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை என்ற புதிய அறிவிப்பை இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்த திட்டத்தை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் அடிப்படையில், இந்த ஏழு நாடுகளுக்கும் நிரந்தரமாக விசா தேவையில்லை என்ற அறிவிப்பை தெரிவிக்கவுள்ளது.
இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று இலங்கை சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்து இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










