» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்!

சனி 21, அக்டோபர் 2023 4:29:55 PM (IST)



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (73), நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைவிட்டு சென்றார். அதன்பின் நாடு திரும்பவில்லை.லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர், 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு திரும்பினார். துபாயில் இருந்து உமீத்-இ-பாகிஸ்தான் என்ற சார்ட்டர்டு விமானத்தில் இஸ்லாமாபாத் வந்து இறங்கினார். அவருடன் அவரது குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நண்பர்களும் வந்தனர்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் நிறுவனரான நவாஸ் ஷெரீப் வருகையால் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இது நம்பிக்கை மற்றும் கொண்டாட்டத்திற்கான நேரம் என்றும், அவர் திரும்பியது பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு நல்ல விஷயம் என்றும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவரும் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால், நாடாளுமன்ற பதவிக்காலம் முடிய சில நாட்கள் இருந்த நிலையில் அவர் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியிருப்பது கட்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. எனினும் வழக்குகள் அவர் தலைக்கு மேல் கத்தி போன்று தொங்கிக்கொண்டிருக்கின்றன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் நவாஸ் ஷெரீப்புக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இந்த வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக அவரது வழக்கறிஞர் குழு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory