» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கியது மன்னிக்க முடியாதது: ஐ.நா.வில் ரஷ்யா மீண்டும் தீர்மானம்!

புதன் 18, அக்டோபர் 2023 11:10:35 AM (IST)

காசாவில் அல் அஹ்லி மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கி தகர்த்துள்ளது மன்னிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 509க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் காசா போருக்கு எதிராக மீண்டும் ரஷ்யா தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. அல் அஹ்லி மருத்துவமனை தாக்கி தகர்க்கப்பட்டதை எப்போதும் மன்னிக்க முடியாது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 

இந்த போர் குற்றத்திற்கு இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கனவே நேற்று ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது. அதில் ஹமாஸ் பயங்கரவாத குழு குறித்து எதுவும் குறிப்பிடப்படாமல் தீவிரவாத தாக்குதலை மட்டும் கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா, கபோன், மொசாம்பிக், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த தீர்மானத்துக்கு எதிராக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய 4 நாடுகள் எதிராக வாக்களித்தன. அல்பேனியா, பிரேசில், ஈக்வடார், கானா, மால்டா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதனால், இந்தத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ரஷ்யா புதியதாக மேலும் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.


மக்கள் கருத்து

மக்கள்Oct 18, 2023 - 07:25:25 PM | Posted IP 162.1*****

ஐநா வே ஒரு பிராடு கூட்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory