» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண் கவிஞர் மரணம்

ஞாயிறு 15, அக்டோபர் 2023 3:37:03 PM (IST)

இலக்கியத்திற்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய கவித்துவமான, தனித்துவமான படைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். புலிட்சர் விருது, அமெரிக்காவின் புத்தக விருது, புத்தக விமர்சனங்கள் விருது உள்ளிட்டவற்றை வென்றவர். அமெரிக்க நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்தவர். இவரின் இலக்கிய சேவையை பாராட்டி கடந்த 2020-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.நாட்டில் உள்ள பெரும்பாலான இலக்கிய விருதுகளுக்கு சொந்தகாரர்.

லூயிஸ் க்ளுக் மாசாசூட்ஸ் மாகாணம் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் புற்றுநோய் காரணமாக அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 80. சிலமாதங்களுக்கு முன்பு தன் உடலில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் தத்துவங்கள், கசப்பான நினைவுகள், மரபுசார் குறிப்புகள், சமகால நிகழ்வுகள், டார்க்-காமெடி ஆகியவற்றை கொண்டது. நன்கொடையாளரும், மனிதநேயம் மிகுந்தவரும், ஆசிரியருமான லூயிஸ் க்ளுக்கின் மரணம் இலக்கியவாதிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory