» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
புதன் 11, அக்டோபர் 2023 12:20:39 PM (IST)
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, மூன்று முறை கடுமையான நிலநடுக்கங்களும், குறைந்த அளவிலான நில அதிா்வுகளும் ஏற்பட்டன. நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தில் முதலில் சுமாா் 2,000 போ் உயிரிழந்ததாக தலிபான்கள் கூறியிருந்தனா்.
இந்த எண்ணிக்கை நேற்று 2,795-ஆக அதிகரித்தது. இது தவிர, நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும், 485 போ் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகளை உள்ளூா்வாசிகள் மற்றும் தன்னாா்வலா்கள் தொடா்ந்தனா். ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4000 -ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று (அக்.11) காலை 6.11 மணிக்கு பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம். ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, மூன்று முறை கடுமையான நிலநடுக்கங்களும், குறைந்த அளவிலான நில அதிா்வுகளும் ஏற்பட்டன.
நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தில் பலியானோரின் எண்ணிக்கை 4000 -ஆக உயர்ந்துள்ளது. சுமார் 20 கிராமங்களில் 1,983 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகி உள்ளது, 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே உள்ளது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேசிய மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 35 குழுக்கள், உள்ளூா்வாசிகள் மற்றும் தன்னாா்வலா்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருக்கக்கூடியவா்களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஹெராத் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உறுதியளித்துள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










