» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இஸ்ரேல் போரை தொடங்கவில்லை; ஆனால் முடித்து வைக்கும்: பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை
செவ்வாய் 10, அக்டோபர் 2023 11:01:20 AM (IST)
இஸ்ரேல் போரை தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு பேசியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னறிவிப்பு எதுவுமின்றி கடந்த சனிக்கிழமை திடீரென தாக்குதல் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. போரானது எங்கள் மீது கொடூர மற்றும் வன்முறையான வழியில் திணிக்கப்பட்டு உள்ளது. இந்த போரை இஸ்ரேல் தொடங்கவில்லை என்றபோதும் முடித்து வைக்கும் என எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 2,300 இஸ்ரேல் மக்கள் காயமடைந்து உள்ளனர். இதற்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் விலை கொடுப்பார்கள் என்றும் அதனை நீண்ட காலத்திற்கு அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்றும் நேதன்யாகு கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)










