» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபர்: இந்தியா கண்டனம்

வியாழன் 21, செப்டம்பர் 2023 12:17:29 PM (IST)

க ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபருக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஐ.நா. பொது சபையின் 78-வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற துருக்கி அதிபர் எர்ட்கன் பேசும்போது, காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

"பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது" என எர்டோகன் தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பங்கு வகிப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் எர்டோகன், காஷ்மீர் பிரச்சனையை எழுப்பி வருகிறார். இதற்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது. "பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்றுக் கொள்ள வேண்டும்" என இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory