» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை கரம்பிடித்தார் ஜோர்டன் பட்டத்து இளவரசர்!

வெள்ளி 2, ஜூன் 2023 11:33:45 AM (IST)



ஜோர்டானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லா, சவுதி அரேபிய கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார்.  

2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன்(28), ஒரு முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சவூதி கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப்(29)  உடன் திருமணம் செய்து கொண்டார். இந்த விழா தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது. சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, ராணி ரானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் மன்னர்கள், ராணிகள், இளவரசிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தம்பதிகளின் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. மக்கள் கூட்டம் அலைமோதுவதை தடுக்க நேற்று அரசு விடுமுறையை அரசு அறிவித்து இருந்தது. இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் குறித்த முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று வெகுவிமர்சையாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஜோர்டான் அரச திருமணத்தின் விருந்தினர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பிடன், பிராந்திய மன்னர்கள், நெதர்லாந்தின் மன்னர் மற்றும் உறுப்பினர்கள் போன்ற  முக்கியமானவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory