» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபர் உடல்நிலை கவலைக்கிடம்!!

திங்கள் 29, மே 2023 5:08:17 PM (IST)



பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்புக்குப் பிறகு உடல்நிலை மோசமடைந்து, மாஸ்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் கலந்து கொண்டார். இதன்பின்னர், அதிபர் புதின் மற்றும் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ இருவரும் நேரில் சந்தித்து, பூட்டிய கதவுகளுக்கு பின்னால், ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர், மாஸ்கோ நகரிலுள்ள மத்திய கிளினிக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக லுகாஷென்கோ உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது என பெலாரசில் 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளரான வேலரி செப்காலோ தெரிவித்து உள்ளார். எனினும், தனது குழுவினர் அளித்த இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என செப்காலோ கூறியுள்ளார் என அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிகையான நியூஸ்வீக் தெரிவிக்கின்றது.

சிறந்த மருத்துவ நிபுணர்கள் சென்று, லுகாஷென்கோவை அழைத்து வரவுள்ளனர். ரஷிய அரசு அவருக்கு விஷம் வைத்து இருக்க கூடும் என்ற யூகங்களை தவிர்க்கும் வகையில், பெலாரஸ் சர்வாதிகாரியான லுகாஷென்கோவை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தகவல் தெரிவிக்கின்றது. உக்ரைனுக்கு எதிரான போரில், பெலாரசில் அணு ஆயுத ஏவுகணைகளை குவிப்பதற்காக அந்நாட்டு அரசுடனான ஒப்பந்தம் ஒன்றில், ரஷியா கடந்த வாரம் கையெழுத்திட்டது என ரஷியாவில் இருந்து வெளிவரும் டாஸ் பத்திரிகை தெரிவித்து இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory