» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்க பிரதமர் உறுதி
புதன் 24, மே 2023 4:48:01 PM (IST)

ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி அந்தோணி அல்போன்சிடம் கவலை தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில், 'ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்து நானும், பிரதமர் அல்பானீசும் விவாதித்தோம். இன்றும் இந்த விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினோம். இது போன்ற நாசவேலைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவு மற்றும் வலுவான உறவுகளுக்கு அவர்களின் செயல்பாடுகள் அல்லது கருத்துக்களால் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு கூறுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற கூறுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக இன்று பிரதமர் அல்போன்ஸ் மீண்டும் உறுதியளித்துள்ளார் என கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை ஒப்பந்தம்
புதன் 31, மே 2023 10:33:33 AM (IST)

புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபர் உடல்நிலை கவலைக்கிடம்!!
திங்கள் 29, மே 2023 5:08:17 PM (IST)

ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை: ஜப்பான் அரசு ஒப்புதல்
சனி 27, மே 2023 5:27:34 PM (IST)

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
வெள்ளி 26, மே 2023 10:48:16 AM (IST)

சிங்கப்பூர்- மதுரை நேரடி விமான சேவை: முதல்வர் ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை
வியாழன் 25, மே 2023 10:38:58 AM (IST)

சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை
புதன் 24, மே 2023 11:24:15 AM (IST)

டேய் கருத்து கூறிய ஆண்ட பரம்பரை அவர்களுக்குமே 29, 2023 - 04:50:52 PM | Posted IP 162.1*****