» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை
புதன் 24, மே 2023 11:24:15 AM (IST)

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபா்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தாா்.
இந்நிலையில், சிங்கப்பூர் அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவனமான டெமாசெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திலன் பிள்ளை சந்திரசேகரா மற்றும் செம்கார்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிம்யின் ஒங் ஆகியோருடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர். மொத்தம் 9 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் நாட்டுக்கு செல்லவுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:18:42 AM (IST)

தைவானுக்கு 10 பில்லியன் டாலர் ஆயுதங்கள் விற்பனை: அமெரிக்கா அறிவிப்பு - சீனா கண்டனம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 5:48:17 PM (IST)

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)

பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:03:51 PM (IST)

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்யா அதிபர் புதின் கையெழுத்து!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 11:21:23 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)











இந்தியன்மே 24, 2023 - 01:31:19 PM | Posted IP 162.1*****