» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமின் ஜூன்8 வரை நீட்டிப்பு

செவ்வாய் 23, மே 2023 3:49:01 PM (IST)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜாமின் வரும் ஜூன்8ம் தேதி வரை நீட்டித்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.இம்ரானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், அவரை உடனடியாக விடுவிக்கும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில் இன்று(மே 23) மீண்டும் வழக்கு விசாரணையில் இம்ரான் கானுக்கு ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கு எதிரான 8 வழக்குகளிலும் வருகிற ஜூன் 8 வரை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory