» செய்திகள் - விளையாட்டு » உலகம்

8 அடி 3 அங்குல நீளத்துக்கு தாடி வளர்த்து கனடா சீக்கியர் மீண்டும் கின்னஸ் சாதனை!

வெள்ளி 24, மார்ச் 2023 5:32:14 PM (IST)



8 அடி 3 அங்குல நீளத்துக்கு தாடி வளர்த்து சொந்த கின்னஸ் சாதனையை மீண்டும் முறியடித்தார் கனடா சீக்கியர்

ஸ்வீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்ததுதான் கின்னஸ் உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ம் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்தார். அப்போது அவரது தாடியின் நீளம் 7 அடி 8 அங்குலமாக இருந்தது. அதன்பின் கடந்த 2010-ம் ஆண்டில் இவரது தாடியை இத்தாலியில் நடந்த நிகழ்ச்சியில் அளந்தபோது அது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ந்திருந்தது. 

கடந்தாண்டு அக்டோபர் 15-ம் தேதி சர்வன் சிங் தாடியை அளந்தபோது அது 8 அடி 3 அங்குலமாக இருந்தது. ஆனால் முன்பு இருந்ததைவிட, தாடி தற்போது நரைத்த நிலையில் உள்ளது. இது குறித்து சர்வன் சிங் கூறுகையில், ‘‘நான் 17 வயது முதல் தாடியை வளர்த்து வருகிறேன். ஒருபோதும் வெட்டியதில்லை. சீக்கியராக இருப்பதில் தாடி முக்கியமான அம்சங்களில் ஒன்று. இந்த தாடியை கடவுளின் பரிசாக கருதுகிறேன்’’ என்றார்.


மக்கள் கருத்து

எவன்Mar 24, 2023 - 05:39:02 PM | Posted IP 162.1*****

தாடி வச்சி என்ன பண்ண ? வேற ஒன்னும் இல்லை. வெளிநாட்டில் முட்டாள்கள் அதிகம் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory