» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர சீனாவிற்கு அழைப்பு விடுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

வியாழன் 23, மார்ச் 2023 5:00:53 PM (IST)

ரஷியா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஓர் ஆண்டை கடந்தும் நீண்டு வரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உள்பட உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை. இதனிடையே ரஷியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டது. 

இந்த நிலையில் 3 நாள் பயணமாக கடந்த 20-ந் தேதி ரஷியா சென்ற சீன அதிபர் ஜின்பிங், நேற்று முன்தினம் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சீனா அமைதி திட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

அதன் பிறகு இருவரும் கூட்டாக பத்தரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது புதின், "சீன அமைதித் திட்டத்தின் பல விதிகள் உக்ரைனில் மோதலை தீர்ப்பதற்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படலாம். உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் சமாதானத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில் சீனாவின் அமைதி திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அந்த தயார் நிலையை ரஷியா இதுவரை பார்க்கவில்லை" என கூறினார்.

இந்த நிலையில் உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, "போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் சீனாவிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. சீனாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory