» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனில் ரஷியா குண்டு வீச்சு: 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதம், ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளி 17, மார்ச் 2023 12:17:09 PM (IST)



உக்ரைன் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் ஏராளமான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.  இதனிடையே உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் உக்ரைனில் உள்ள கோஸ்டியான்டினிவ்கா என்ற நகரத்தில் ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் அந்நகரத்தில் உள்ள 30 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 50 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமின்றி ரெயில் நிலையங்கள், மார்கெட் மற்றும் தனியார் விடுதிகள் மீதும் ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

இங்கMar 17, 2023 - 01:39:00 PM | Posted IP 162.1*****

இருக்குற ஆண்ட பரம்பரைகள அனுப்பி வைங்க... அடிச்சுட்டு சாவட்டும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory