» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை

வெள்ளி 17, மார்ச் 2023 11:46:39 AM (IST)

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைபிடித்து சென்றது. அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

கந்தசாமிJul 24, 1679 - 03:30:00 AM | Posted IP 162.1*****

படகு இருந்ததால்தானே அவன் நாட்டுககுள் நூழைந்தாய் அதனால் அதை தர மறுக்கிறான் பிறகு உங்களை வைத்து தெண்ட சோறு இந்த பஞ்சத்தில் போட முடியுமா?

தமிழன்Mar 17, 2023 - 12:56:04 PM | Posted IP 162.1*****

12 பேரை விடுவித்தது சரி, ஆனால் படகுகளை பறிமுதல் செய்து விற்று தின்று விடுவார்கள்.அங்கேயும் திருட்டு குடும்ப ஆட்சி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory